MNT Traders is a trusted business based in Salem, Tamil Nadu, led by experienced proprietors/partners Maheswari Kumar, Nandhini Kumar, Tamilarasi Kumar. As the fourth generation in this field, we continue a strong legacy built over three generations of silver craftsmanship.
Our journey began with our great-grandfather P. Marimuthu, followed by our grandfather M.Venkatachalam, and later expanded by our father V. Kumar, who took the business to the next level by building strong customer relationships and delivering quality products in silver ornament making.
Building on this foundation, we have now expanded into gold, silver, and copper, offering a wider range of products to meet modern customer needs while preserving the values of trust, quality, and reliability established by previous generations.
We are committed to quality, transparent pricing, and customer satisfaction. At MNT Traders, customer satisfaction remains our top priority. We aim to build long-term relationships by providing dependable service, competitive pricing, and trusted support.
With the launch of our mobile and web platform, we aim to provide real-time gold and silver price updates, making it easier for customers to stay informed and connected with us. We are continuously working on new ideas and product offerings to serve you better with improved quality and convenience.
We look forward to continuing our legacy and serving you with trust, quality, and excellence.

____________
MNT Traders என்பது தமிழ்நாட்டின் சேலம் நகரத்தில் அமைந்துள்ள நம்பிக்கைக்குரிய நிறுவனம் ஆகும். அனுபவம் வாய்ந்த உரிமையாளர்கள்/கூட்டாளர்கள் மகேஸ்வரி குமார், நந்தினி குமார், தமிழரசி குமார் தலைமையில் இயங்கும் எங்கள் நிறுவனம், நான்காம் தலைமுறையாக இந்த துறையில் செயல்பட்டு, மூன்று தலைமுறைகளாக உருவான வெள்ளி கைவினை மரபை தொடர்ந்து வருகிறது.
எங்கள் பயணம் எங்கள் பெரிய தாத்தா P. மாரிமுத்து, அவர்களால் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எங்கள் தாத்தா M. வெங்கடாச்சலம், அவர்கள் முன்னெடுத்து சென்றார். பின்னர் எங்கள் தந்தை V. குமார், அவர்கள் வணிகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று, வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்கி, தரமான வெள்ளி நகைகள் தயாரிப்பில் சிறந்து விளங்கினார்.
இந்த வலுவான அடித்தளத்தின் மீது, இப்போது நாங்கள் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு போன்றவற்றில் விரிவடைந்து, தற்போதைய வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வருகிறோம். அதே நேரத்தில், முந்தைய தலைமுறைகள் உருவாக்கிய நம்பிக்கை, தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய மதிப்புகளை தொடர்ந்து பாதுகாத்து வருகிறோம்.
நாங்கள் தரம், வெளிப்படையான விலை நிர்ணயம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் உறுதியாக செயல்படுகிறோம். MNT Traders இல், வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் முதன்மை முன்னுரிமையாகும். நம்பகமான சேவை, போட்டித்தன்மை கொண்ட விலைகள் மற்றும் உறுதியான ஆதரவு மூலம் நீண்டநாள் உறவுகளை உருவாக்குவது எங்கள் நோக்கமாகும்.
எங்கள் மொபைல் மற்றும் இணைய தளத்தின் அறிமுகத்தின் மூலம், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் நேரடி (real-time-updates) புதுப்பிப்புகளை வழங்குகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக தகவல்களை அறிந்து கொண்டு எங்களுடன் இணைந்திருக்க முடியும். மேலும், புதிய யோசனைகள் மற்றும் தயாரிப்புகள் மூலம் உங்களுக்கு மேலும் சிறந்த தரத்திலும் வசதியுடனும் சேவை வழங்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.
எங்கள் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, உங்களுக்கு நம்பிக்கை, தரம் மற்றும் சிறப்புடன் சேவையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.